Home இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஐரோப்பா நோக்கி பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஐரோப்பா நோக்கி பயணம்!

by admin

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளுகளுக்கு, இன்று சனிக்கிழமை (17.06.23) அதிகாலை, உத்தியோகபூர்வ பயணம்  ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து பயணமாகினர்.

பிரான்சின் பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

“இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவுக்கான பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More