பிரேசிலை தாக்கிய கடும்புயலில் சிக்கி 13 பேர் உயிாிழந்துள்ளதுடன் 20-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனா் . பிரேசிலின் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததனால் ஏற்பட்ட சூறாவளியில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தொடா்ந்து இடைவிடாமல் மழை பெய்தமையினால் வீதிகளி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுயதுடன் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் போன நிலையில் மீட்பு குழுவினர் அங்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை மீட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்ற நிலையில் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் உயிாிழந்துள்ளதாகவும் , 20-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தொிவலிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளதனால் அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.