Home இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவிற்கு செல்லவுள்ளார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவிற்கு செல்லவுள்ளார்!

by admin

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22.06.23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More