Home இலங்கை யாழ் பல்கலையில், மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ் பல்கலையில், மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

by admin
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
 பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றின் படி, பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். கே. அகிலன்  மின் மற்றும் இலத்திரனியல் துறையில் பேராசிரியராகவும் ,  விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி க. பகீரதன்  விவசாய உயிரியல் துறையில் பேராசிரியராகவும், இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன்,  இந்து நாகரிகத் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More