793
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் லங்கா பிரீமியர் லீக்கில் பிரபல ஹிந்தி நடிகரான சஞ்சய் தத் முதலீடு செய்துள்ளார். இதனை அவா் தனது டுவிட்டா் பக்கதில் இட்ட பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். B-Love Kandy என்ற கண்டி அணியினை அவா் வாங்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
நானும், எனது சகோதரர்களான உமர் கான் மற்றும் எச்.எச். ஷேக் மர்வான் பின் மொஹமட் பின் ரஷித் அல் மக்டு ஆகியோா் 2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் இணைந்து B-Love Kandy கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love