383
யாழ்ப்பாணம் ,சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடி சென்றனர்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இருவரை சந்தேகத்தில் கைது செய்தனர்.
கைதான நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட இலத்திரனியல் பொருட்களை மீட்டதாகவும், குறித்த நபர்கள் சுன்னாகம் – தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love