Home இலங்கைதொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஏழாலையில் போராட்டம்!

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஏழாலையில் போராட்டம்!

by admin

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் நெருக்கமாக குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். –

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More