491
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டனர்
Spread the love