Home இலங்கைராஜபக்ஸக்களும், மைத்திரியும் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்!

ராஜபக்ஸக்களும், மைத்திரியும் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்!

by admin

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ  ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

தங்கக் கடத்தலில் குற்றச்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆதரவாக வாக்களித்தார்.

அனுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியு.டி.ஜே செனவிரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் ஏ.எல்.எம். அத்தாவுல்லா ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டு, பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More