Home இலங்கைவள்ளம் நீரில் மூழ்கியதில் -ஒருவர் பலி-மற்றொருவரை காணவில்லை.

வள்ளம் நீரில் மூழ்கியதில் -ஒருவர் பலி-மற்றொருவரை காணவில்லை.

by admin

 

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவாின்  சடலம் இன்று திங்கட்கிழமை(3) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்ட மீனவர்  பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது. காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.

-மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.-உயிலங்குளம் காவல்துறையினா்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More