447
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்புஉற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை காவல்துறைப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 30 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட நபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love