380
யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு , பொருட்கள் திருடப்பட்டுள்ளன என உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
திருடப்பட்ட பொருட்களை வேறு இருவரிடம் ஒப்படைத்துள்ளதாக, விசாரணைகளில் சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களின் உடமையில் இருந்து, வீடுகளில் திருடப்பட்ட மின்மோட்டர், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் காவல்துறையினா் முற்படுத்தியதை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
Spread the love