464
மல்லாவி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவற்துறைப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love