Home இந்தியா  இலங்கைக்கு திரும்ப தனக்கு அனுமதி அளிக்குமாறு ரணிலிடம், சாந்தன் கோரிக்கை!

 இலங்கைக்கு திரும்ப தனக்கு அனுமதி அளிக்குமாறு ரணிலிடம், சாந்தன் கோரிக்கை!

by admin

இலங்கைக்கு திரும்ப தனக்கு அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான தான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது தான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புவதாகவும், ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தயவுசெய்து தான் இலங்கைக்கு  திரும்ப அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் தன் மீது வழக்கு இல்லை. தயவு செய்து தனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு தான் மீழ உதவ வேண்டும் என  அதில் கூறி உள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More