12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கை மின்சார சபையிடம் மின்விளக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் வைபவம் ஒன்றிற்காக பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்ட பின்னர் உபகரணங்களும் அகற்றப்பட்டுள்ளன.
இதனால் பாதுகாப்பு விளக்குகள் பொருத்துவதற்கும், ஜெனரேட்டர் விநியோகத்திற்கும் மின்சார சபைக்கு 2,682,246.57 ரூபாய் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது. ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் நளின் ஹெவகே விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அவருக்கு இந்த தகவலை வழங்கியுள்ளது.
இந்த மின்கட்டணம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் திருமண வைபவத்துடன் தொடர்புடையது என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நளின் ஹேவகே தெரிவித்தார்.
மின் கட்டண சர்ச்சை! – நாமல் அனுப்பிய அவசர கடிதம்!
மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார்.
மின்சாரக் கட்டணம் குறித்த துல்லியமான விவரங்களைத் தமக்கு வழங்குமாறும், அது உண்மையான ஆவணமாக இருந்தால் அதற்குத் தகுந்த பதிலை அளிப்பதாக இலங்கை மின்சார சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
2019 ஆண்டு ஒன்பதாம் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டிய வீட்டில் நடந்த திருமண வைபவத்திற்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்திற்காக 26,82,246.57 ரூபா செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
“இலங்கை மின்சார சபை அவ்வாறான எந்தவொரு மின் கட்டண பட்டியலையும் எங்களுக்கு இதுவரை அனுப்பவில்லை. மின் கட்டணப் பட்டியல் எப்போது அனுப்பப்பட்டது என்பதை அறிவிக்குமாறு கோரியுள்ளேன்.