போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் தடையாக உள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “போதைப்பொருள் தொடர்பில் தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாளாந்தம் சோதனைகளை நடத்தி அவற்றை விற்பனை செய்து விநியோகம் செய்பவர்களை காவற்துறைனர் கைது செய்கின்றனர்.
பொதுமக்களின் ஆதரவுடன் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவற்துறைனர் பணியாற்றி வருகின்றனர்.
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களே சமூகத்தில் நடக்கின்ற மோசமான சம்பங்களுக்கு காரணமாக இருக்கின்றனர்.
திருட்டுகள், வழிப்பறிகள், கொள்ளைகள், கார் திருட்டுகள் மற்றும் வீட்டில் நடக்கும் குடும்ப வன்முறைகள் கூட போதைப் பழக்கத்தினால் ஏற்படுவதாகவும் பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.