Home இந்தியா7 அடுக்கு பாதுகாப்பை கடந்து, சென்னை விமான நிலையத்துள் சுற்றிய, யாழ் தினேஷ் ஞானசூரியன்!

7 அடுக்கு பாதுகாப்பை கடந்து, சென்னை விமான நிலையத்துள் சுற்றிய, யாழ் தினேஷ் ஞானசூரியன்!

by admin

விமான நுழைவுச் சீட்டு  இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை (14.08.23) இரவு இளைஞர் ஒருவர் நுழைவுச் சீட்டு, சிறப்பு அனுமதி பத்திரம் எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும்  பகுதி வரை சென்றுஅங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக  பகுதியில் ஊழியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை  திருட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்தஇளைஞரைப் பிடித்து அடித்தஅதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தினேஷ் ஞானசூரியன் என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை பயணித்திருப்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More