348
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிக்கு கைத்தொலைபேசியை வழங்கிய சிறைக்காவலர் ஒருவர் சிறைச்சாலையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் பொருத்தியிருந்த கமராவை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கண்காணித்த போது , சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் , சிறைக்கைதி ஒருவருக்கு கையடக்க தொலைபேசியை வழங்கியதை அவதானித்து உள்ளனர்.
அதனை அடுத்து , குறித்த சிறைக்கைதியை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பரிசோதித்த போது , அவரது உடைமையில் இருந்து கையடக்க தொலைபேசியை மீட்ட நிலையில் , கையடக்க தொலைபேசியை வழங்கிய பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கைது செய்து , யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்
Spread the love