Home இலங்கையாழ். சிறைக்கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது

யாழ். சிறைக்கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது

by admin
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிக்கு கைத்தொலைபேசியை வழங்கிய சிறைக்காவலர் ஒருவர் சிறைச்சாலையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் பொருத்தியிருந்த கமராவை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கண்காணித்த போது , சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் , சிறைக்கைதி ஒருவருக்கு கையடக்க தொலைபேசியை வழங்கியதை அவதானித்து உள்ளனர்.
அதனை அடுத்து , குறித்த சிறைக்கைதியை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பரிசோதித்த போது , அவரது உடைமையில் இருந்து கையடக்க தொலைபேசியை மீட்ட நிலையில் , கையடக்க தொலைபேசியை வழங்கிய பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கைது செய்து , யாழ்ப்பாண   காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More