Home இலங்கைசாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழி பரீட்சை யாழில்!

சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழி பரீட்சை யாழில்!

by admin

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேல் தோற்றி, சித்தியடைய தவறிய யாழ்.மாவட்டத்தை சேர்ந்த பரீட்சார்த்திகள, தமது பிரதேச செயலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கிராம சேவையாளரிடம் உறுதிப்படுத்தி, பிரதேச செயலரினால் மேலொப்பம் இடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு குறித்த திகதிகளில் வாய் மொழி பரீட்சையில் தோற்ற முடியும் என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More