Home உலகம்உலகின் மிக வேகமான பெண்மணியாக அமெரிக்காவின் Sha’Carri Richardson சாதனை!

உலகின் மிக வேகமான பெண்மணியாக அமெரிக்காவின் Sha’Carri Richardson சாதனை!

by admin

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Sha’Carri Richardson, உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார்.

ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள உலக சாம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில்  அவர் 10.65 செக்கன்களில் நிறைவு செய்து  வெற்றி பெற்றதையடுத்து  இந்த சாதனையை படைத்துள்ளார்.

இது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும்.

கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் ஷெலீ-ஆன் ப்ரேஸர் – ப்ரைஸ் (Shelly-Ann Fraser-Pryce) இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்தார். அவர் போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More