அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவாின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 செ.மீ மீட்டர் நீளமான ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ளனா். 64 வயதாக குறித்த பெண்மணி நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். . மூன்று மாதங்கள் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்தும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. என்பதுடன் அவருக்கு ஞாபக மறதியும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரின் தலையை எம்.ஆர்.ஐ ஸ்கான் செய்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, அவரின் மூளையில் 8 செ.மீ நீளம் உள்ள ஒட்டுண்ணி புழு உயிருடன் காணப்பட்டுள்ளது.
அது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தைச் சேர்ந்த உருண்டைப் புழுவாகும். அவை அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினி போன்ற பிரதேசங்களில் வாழக்கூடிய மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே உள்ளது என மருத்துவா்கள் தொிவித்துள்ளனா்.
மனித மூளைக்குள் பாம்புகளின் ஒட்டுண்ணி கண்டறியப்படுவது இதுவே முதல்தடவை என தொிவித்துள்ள மருத்துவர்கள் அந்த பெண்ணின் மூளைக்குள் அந்த ஒட்டுண்ணி புழு எப்படி வந்திருக்கும் என ஆய்வு செய்ததில், அந்தப் பெண் சாப்பிட்ட உணவு எதிலாவது, புழுவின் முட்டை இருந்திருக்கலாம் எனவும் அதையும் அவர் சாப்பிட்டிருக்கக்கூடும். எனவும் தொிவித்துள்ளனா்.