Home இலங்கைஉறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

by admin

உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தாலி கொடியை காணவில்லை என வட்டுக்கோட்டை  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , தாலிக் கொடி காணாமல் போன அன்றைய தினம் அவர்களின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினரான பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு அவரை காவல்துறையினா் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட பெண் , அதனை அடகு நிறுவனம் ஒன்றில் 2 இலட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதனை அடுத்து , அடகு வைக்கப்பட்ட நகையை மீட்ட காவல்துறையினர் , நகையுடன் பெண்ணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தினர்.  வழக்கினை விசாரித்த நீதவான் , பெண்ணை கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More