Home இலங்கை இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி சாதனை

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி சாதனை

by admin

 

இலங்கை மகளிர் அணி முதல் தடவையாக இங்கிலாந்து  மகளிா் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றி  சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரையே இவ்வாறு 2 க்கு 1 எனும்  கணக்கில் இலங்கை மகளிர் அணி வென்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி   வெற்றி பெற்று தொடரைக் கைப்பறிறியுள்ளது.

இங்கிலாந்தின் Derby நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து  அணி, 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 117 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு  துடுப்பெடுத்தாடிய இலங்கை  அணி, 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.

இதற்கமைய, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை 2 க்கு 1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றி  சாதனை படைத்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More