509
நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சப்பர திருவிழாவான எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 08 வரையிலும் , 13ஆம் திகதி தேர்த்திருவிழா மற்றும் 14ஆம் திகதி தீர்த்த திருவிழா அன்று , கலாய் 08 மணி முதல் இரவு 08 மணி வரையிலும் , 15ஆம் திகதி பூங்காவன திருவிழாவன்று மாலை 4 மணி முதல் இரவு 08 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண இரத்த வங்கியில் சகல வகையான இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆலயத்திற்கு வருகை தருவோர் , உயிர் காக்கும் உன்னத பணிக்கு இரத்த தானம் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் , 0772105375 மற்றும் 0766242311 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Spread the love