Home இலங்கை வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை

 வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை

by admin
முல்லைத்தீவு  நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை
  முன்னிலையாகுமாறு வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு   காவல்துறையினா்  ஊடாக நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு   காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு காவல்துறையினா்   முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்.   அந்த வழக்கில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் முதன் முதலாக  நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More