885
காணி மோசடி சம்பவம் தொடர்பில் நொத்தாரிஸ் ஒருவரின் அலுவலக உதவியாளர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றினை மோசடியாக விற்பனை செய்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பிரகாரம் பிரதேச சபை ஒன்றின் முன்னாள் தவிசாளர் , கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு , அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில், குறித்த நபர்கள் காணி மோசடியில் ஈடுபடுவதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் தற்போது நொத்தாரிஸின் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த நொத்தாரிஸ் நீதிமன்றில் முன் பிணை பெற்றுக்கொண்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது.
Spread the love