கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகிறது. சிங்கள பௌத்தமக்கள் வாழாத தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிறுவுவதற்கான வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அவ்வாறான அத்துமீறல்களை கண்டித்தும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரைபிரச்சினைக்கு தீர்வு கோரியும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடைபெறவுள்ளது.
ஹர்த்தால் ஏற்பாடுகள் தொடர்பில், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரணுடனும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுடனும் தொலைபேசியில் கலந்து பேசி உள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹர்தால் தொடர்பான அடுத்த கட்டம் நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயவுள்ளோம். இங்கிருந்து கிழக்கு மாகாணத்துக்கு சென்று ஹார்த்தலை முன்னெடுக்க பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.
ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீதிபதி விவகாரம் – குற்ற புலனாய்வு பிரிவின் அறிக்கையை பொருட்டாகவே எடுக்கவில்லை
தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம். மேலும் தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.