நிறுவனத்தில்( தனியார் பாதுகாப்பு நிறுவனம்) இருந்து உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இன்று வைத்தியசாலையில் முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக்கலந்தரையாடலில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் LRDC தலமை உத்தியோகத்தர்களுக்கு சில ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட முடிவுகள் குறித்த கலந்துரையாடலில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு
1. LRDC பாதுகாப்பு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது வெளிப்படைத்தன்மை பேணப்படுவதோடு உரிய தகைமை
உடையவர்களை ஆட்சேர்ப்பு செய்யவேண்டும்.
2. பாதுகாப்பு சேவைக்கு சேர்க்கப்படுபவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
3. LRDC பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வைத்தியசாலை நிரவாகத்தினருடன் சுமூகமான உறவை பேணுபவராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
4. பிரச்சினைகளில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.
5. காலாண்டுக்கு ஒருமுறை உயர்மட்ட அதிகாரிகள் வருகை தந்து பாதுகாப்பு சேவை மேம்படுத்துவது தொடர்பாக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் வைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.
6. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.