வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக காவல்துறைமா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் இன்றையதினம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில்,கடந்த சில நாட்களாக மங்களராமய அம்பிட்டிய சுமண தேரரின் பகிரங்கமான அறிக்கைகள் ஊடகங்களில் மிக அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அம்பிட்டிய சுமண தேரர், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும், நாட்டின் தென்பகுதியில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று வெளிப்படையாக மிரட்டிச் சென்றுள்ளார்.
இது அப்பட்டமாக 2007 ஆம் ஆண்டின் ICCPR சட்டத்தின் 56 ஆம் பிரிவு 3(1) மற்றும் (2) ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஏன் காவல்துறையினா் குறித்த தேரருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை – என கேள்வி எழுப்பினார்.
குறித்த கடிதத்தின் பிரதி சபாநாயகருக்கும், ஊடகங்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.