Home இலங்கைகலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்வு

கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்வு

by admin
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது , இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை வழங்கியது. .
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத்  திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி ஆர். விஜயகுமாரனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் நிதி முகாமைத்தவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் நிதி முகாமைத்தவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More