340
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான 12வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று (01.11.23) கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பிரதான ஏற்றுமதிச் சந்தையைப் பேணுவதுடன், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலை வலியுறுத்தும் அதேவேளை, இந்த உடன்படிக்கையின் ஊடாக ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப் பெரிய பொருளாதாரங்களுடன் இலங்கை ஒருங்கிணைக்க எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love