Home இலங்கைபோதை மன்னன் பொப் மார்லி சமிந்த கைது!

போதை மன்னன் பொப் மார்லி சமிந்த கைது!

by admin

காலி – ஓபத்த வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட 4 பேரை ஓபத்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர். ஓபத்த காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி பேருவளை கடற்கரையில் 300 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 288 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இந்த பொப் மாலி எனக் கூறப்படுகிறது.  43 வயதுடைய இவர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மாலபே தலஹேன பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பொப் மாலி உள்ளிட்ட சந்தேகநபர்கள் 4 பேரும்; இன்று (02.11.23) உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More