370
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவெடுத்தூள்ளார்கள் என வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் இ.சசீலன் தெரிவித்தார்.
சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் கற்கைநெறியின் ஆடை வடிவமைப்பிற்கான தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 2016 ஆம் முதல், 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளார்கள்.
குறித்த யுவதிகளில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக வடமாகாணத்தில் உருவாக்கியுள்ளார்கள் .
இவ்வருடம் 398 பேரில் தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரத்தில் சித்தி பெற்ற 302 பேர் இன்றைய தினம் தங்களுக்குரிய சான்றிதழை பெற்றுள்ளார்கள்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் பிரதேச மட்டத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.
சிறந்த தொழில் முயற்சியாளர்களாக இன்று பல யுவதிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றார்கள்.
கொவிட் நெருக்கடியால் கடந்த காலங்களில், சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெறவில்லை.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக சவாலுக்கு மத்தியில் பயிற்சி நெறிகளை கொண்டு நடாத்தினோம். இந்த மாணவிகளுக்கான உதவி கொடுப்பனவு கூட எமக்கு சவாலாக அமைந்தது. இருந்தும் எம்மால் தொடர்ச்சியாக முன்னெடுக்கமுடிந்தது.
எதிர்காலத்தில் மேலும் இவ் பாடாநெறியின் செயற்பாட்டினை அதிகரிக்க நாம் உதவுவோம் என மேலும் தெரிவித்தார்.
Spread the love