Home இலங்கைஅச்சுவேலி தெற்கு கிராம அலுவலருக்கு செம்புல இளங்குருசில் விருது வழங்கி கௌரவிப்பு

அச்சுவேலி தெற்கு கிராம அலுவலருக்கு செம்புல இளங்குருசில் விருது வழங்கி கௌரவிப்பு

by admin
யாழ்ப்பாணம் – அச்சுவேலி தெற்கு கிராம அலுவலர் க.அனுஜனுக்கு,  செம்புல இளங்குருசில் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.   வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை அமரர் கதிரவேலு கேதீஸ்வரன் அரங்கில் நடைபெற்றது.
அதன்போது ,  வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 2023 ம் ஆண்டின் “அறிவிப்பாளர்” கலைக்கான “செம்புல இளங்குரிசில்” விருது, அச்சுவேலி தெற்கு கிராம அலுவலர் க.அனுஜனுக்கு, வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்,  கோப்பாய் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேசத்தின் மூத்த,இளங்கலைஞர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More