Home இலங்கை 22 இந்திய மீனவர்கள் கைது!

22 இந்திய மீனவர்கள் கைது!

by admin

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்தவர்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்திய மீனவர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (19.11.23) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More