272
வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன எனவும், அது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே மோசடியில் ஈடுபடுகின்றனர் .
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் இவ்வாறான 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சுமார் 6 கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறைப்பாட்டாளர்களும் பல லட்சங்களை மோசடியாளர்களிடம் இழந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும், குழுக்களிலும் பகிரப்படும் விளம்பரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயண முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டவர்களா என்பதைப் பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.
Spread the love