465
இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா (வயது 25) எனும் இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களில் தாயும் சேய்களும் நலம் என வைத்தியசாலை நிர்வாகம் வீடு செல்ல அனுமதித்து இருந்தது. அந்நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love