Home இலங்கை 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

by admin

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது, நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.

அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மொத்த மின்சார பாவனையாளர்களில் 65 இலட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும், மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More