1.5K
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின், கூடைப்பந்தாட்ட திடலில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில், கடந்த 10 வருட கால இடைவெளியின் பின்னர் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் சம்பியானதுடன் , நடைபெற்ற சுற்று போட்டிகள் எதிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 15 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love