Home இலங்கையாழில். சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

யாழில். சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

by admin

யாழில்  சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
அந்நிலையில் சீனியை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைவதாக jமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களை நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
அதேவேளை சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More