471
யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
ஊர்காவற்துறை சுருவில் ஐயனார் கோவில் பூசகர் ஆலய மூல விக்கிரகமான ஐயனார் மற்றும் பரிவார மூர்த்தி விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசுகள் என்பவற்றை திருடிய குற்றத்தில் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர், சுமார் 17 இலட்ச ரூபாய் பெறுமதியான 10 பவுண் யந்திர தகடுகள் மற்றும், ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பொற்காசுகள் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது பூசகரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love