Home இலங்கைகஜேந்திரகுமாரை திம்புலாகல, திவுலபத்தனை மக்கள் திருப்பி அனுப்பினர்!

கஜேந்திரகுமாரை திம்புலாகல, திவுலபத்தனை மக்கள் திருப்பி அனுப்பினர்!

by admin

திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இன்று  (15.12.23) காலை சென்ற  நாடாளுமன்ற உறுப்பினரை  பயணிக்க அனுமதிக்கவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்​ளேயே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்  கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் உட்பட பெருந்தொகையான கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே ஸ்தலத்துக்கு விரைந்த கரடியனாறு​ காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த அரசியல்வாதி இனவாதத்தை தூண்டி தமது பயிர்ச்செய்கை நிலத்தை தடை செய்ய வந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More