522
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய ஒரு பெண் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண காவல்துறைப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் இருந்து 44லீற்றர் கசிப்பும் 70லீற்றர் கோடாவும் கைப்பற்றபட்டுள்ளது.மேலும் ஆறு மதுபானப் போத்தல்களும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றபட்டது.மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் மூவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.
Spread the love