யாழ்.மாவட்டத்தில் டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன் , அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்தது. யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் – என்றார்.