Home இலங்கைவடமராட்சி கிழக்கில் இளைஞரின் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கில் இளைஞரின் சடலம் மீட்பு!

by admin

வடமராட்சி கிழக்கு – நித்தியவெட்டை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (02.01.24)) காலை மீட்கப்பட்டுள்ளது.

நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் கூறினர்.

நேற்று முன்தினம்  (01.02.24)) மாலை வீட்டிலிருந்து வௌியேறிய குறித்த இளைஞர் நேற்றிரவு வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுல் நடவடிக்கையில், ஒழுங்கையொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக  காவற்துறையினர் கூறினர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னரே, குறித்த மரணம் கொலையா என்பது குறித்து தெரியவரும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கிளிநொச்சி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியதன் பின், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி காவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More