யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இன்றைய தினம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வு வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போது, வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணைய தளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளுராட்சி நிறுவனங்கள் இவ்வாறு உத்தியோகபூர்வ இணையத் தளங்கள் ஊடாக தங்களின் பணிகளை மேற்கொள்ள எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்த ஆளுநர், பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையதளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தாா்