Home இலங்கை யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி!

யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி!

by admin

வெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவற்துறையினர், நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே காவற்துறையினர்  கைது செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண காவற்துறை பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக 23 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர்  முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , சந்தேகநபர் நெல்லியடி காவற்துறைப்  பிரிவினுள் பதுங்கி இருப்பதாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த காவற்துறையினர்  சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணதில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் சந்தேகநபரை  காவலில் வைத்து காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More