அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக நீதிபதிகள் குழாம், விசாரணை நிறைவில் அறிவித்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, A.H.M.D. நவாஸ், ஷிரான் குணரத்ன, அர்ஜூன அபேசேகர ஆகிய ஐவர் அடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் ஆறு நாட்கள் மனுக்கள் தொடர்பிலான விசாரணை நடைபெற்றது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.