யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ் திரும்பிய நிலையில் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சென்னையிலிருந்து யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து , விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த காவல்துறையினா் அவரைக் கு கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , நீண்ட காலமாக தேடப்பட்ட வந்த நபர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினா் , சந்தேக நபரை காவல்துறைக் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.